இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலை தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்
இந்தியப் பெருங்கடலில் இருந்த ஒரு அமெரிக்க டெஸ்ட்ராயர் கப்பலைத் தாக்கியுள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை(IRGC) தெரிவித்துள்ளது.
அந்தப் போர்க்கப்பல் “Ghadr-380” மற்றும் “Talaieh” ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளதாவது:
"இந்தியப் பெருங்கடலில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படையின் அழிப்புக் கப்பலை (Destroyer) இலக்கு வைத்து ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியது.
எரிபொருள் தாங்கிக் கப்பல் மற்றும் அழிப்புக் கப்பல் ஆகிய இரண்டுமே இலக்கு வைக்கப்பட்டதாகவும், அவற்றின் தளங்களிலிருந்து புகையும் நெருப்பும் எழும்புவதைக் காண முடிந்தது” என்றும் அது தெரிவித்துள்ளது.
Ghadr ஏவுகணை
" Ghadr ஏவுகணை 2,000 கிலோமீட்டர் வரை துல்லியத் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையாகும். Talaieh என்பது 1,000 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளைத் தாக்கக்கூடிய ஒரு மூலோபாய க்ரூயிஸ் ஏவுகணை அமைப்பாகும்.
இது பணி நடைபெறும் போது இலக்கை மாற்றக்கூடிய திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த டெஸ்ட்ராயர் ஒரு அமெரிக்க டேங்கர் கப்பலிலிருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டது என்றும் IRGC தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் இரு கப்பல்களிலும் “பரவலான தீப்பற்றல்கள்” ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையாக IRGC “True Promise 4” என்ற குறியீட்டு பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் உள்ள அமெரிக்க நலன்களையும், “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்” என குறிப்பிடப்படும் இடங்களின் ஆழப்பகுதிகளில் உள்ள பல முக்கிய மற்றும் நுணுக்கமான இலக்குகளையும் தாக்கியதாக IRGC கூறியுள்ளது.
சற்று முன்னர் ஈரானிய ஜெட் விமானத்தை சுட்டுவீழ்த்தியது இஸ்ரேல் : 40 ஆண்டுகளின் பின்னர் நடந்த வான்வழிப்போர்
நடவடிக்கையின் 16வது கட்டம்
IRGC வெளியிட்ட அறிக்கையில், “True Promise 4” நடவடிக்கையின் 16வது கட்டம் அமெரிக்கா - இஸ்ரேல் படைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. அதன் வான்வெளி பிரிவு மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் இதயப்பகுதி மற்றும் வடப்பகுதிகள்” தாக்கப்பட்டது.

அதன் இலக்குகளாக இஸ்ரேல் இராணுவத்தின் பொது தளபதி அலுவலகம், ஹகிரியாவில் உள்ள போர் அமைச்சகம், Bnei Brak பகுதியில் உள்ள முக்கிய மூலோபாய கட்டமைப்புகள், டெல் அவீவின் வடகிழக்கே உள்ள Beit Hakfa பகுதியில் உள்ள இராணுவ இலக்குகள், மற்றும் மேற்கு கலிலேயில் உள்ள இராணுவ மையம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இரானின் பதிலடி தாக்குதலின் நான்காவது நாளில் 680-க்கும் மேற்பட்ட “எதிரி” உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தனது உளவுத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்புகளில் செயல்பாட்டு பலவீனம், தொழில்நுட்ப குறைபாடுகள் மற்றும் கணினி செயல்திறன் குறைவு காரணமாக ஈரான் ஏவுகணைகள் ஊடுருவி தாக்கும் வகையில் வான்வழி பாதைகள் திறந்துவிட்டன என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |