அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலம் - இலஞ்ச ஊழல் குறித்து விசேட கவனம்
புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை அறிவிக்கும் கலந்துரையாடல் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் இன்று(19) இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஊழல் முறைகேடுகளைக் கையாளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உரிய சட்டமூலம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
புதிய சட்டமூலம் தொடர்பில் மேற்படி நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் விளக்கமளித்ததுடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மோசடி மற்றும் ஊழலை தடுப்பதற்கான யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை
ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான சாசனத்தின் அடிப்படையில் இந்த புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கலந்துரையாடலுக்கு நீதியமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், அதிபர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன, மேலதிக நீதி அமைச்சின் செயலாளர் பியுமந்தி பீர்ஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
மேலும், நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், இலங்கை அறிஞர்கள் சங்கம், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட், மாற்றுக் கொள்கைக்கான மையம், நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் முன்னிலையாகியிருந்தனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன உள்ளிட்ட நிபுணர் குழுவினால் இந்த வரைவுச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

