முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்கள் நீக்கம்: ஜனாதிபதி அநுர விடுத்த உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான உத்தரவானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சகல சலுகைகளும் ரத்து
எவ்வாறாயினும், முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு தொடர்ந்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பினின் சகல சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
கொடுப்பனவு
இதன் படி, நாடாளுமன்ற கொடுப்பனவு, பணியாளர் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, முத்திரை கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த அரச வீடுகள் மற்றும் பங்களாக்களையும் மீள கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |