இளம் பெண்ணின் நிர்வாண காணொளியை வைத்திருந்த இரண்டு பல்கலை மாணவர்கள் கைது
தனியார் பல்கலைக்கழகமொன்றில் மென்பொருள் பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்கள், வாட்ஸ்அப் மூலம் தங்கள் நண்பர்களுக்கு இளம் பெண்ணின் நிர்வாண காணொளியை பரப்பியதுடன், அந்த காணொளியை தம்வசம் வைத்திருந்த நிலையில், இன்று அம்பலங்கொடை திலகபுர பகுதியில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த இளம் பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, உயர்கல்வி படிக்கும் இரண்டு மாணவர்களும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக சைபர் குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் பல்கலை மாணவர்கள்
அம்பலங்கொடை திலகபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர்களில் ஒருவர், தனியார் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் பட்டம் பயின்று வருகிறார், மற்றொரு சந்தேக நபர் அதே முகவரியில் வசிப்பவர் மற்றும் ஒருகொடவத்த நிறுவனத்தில் ஓட்டோமொபைல் படிப்பைப் படித்து வருகிறார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |