மொஜ்தபா கமேனி எப்படி உள்ளார் : ஈரானிலிருந்து வெளியான அறிவிப்பு
மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவில் தோன்றவில்லை
எனினும் மொஜ்தபா கமேனி "நல்ல ஆரோக்கியத்துடன்" இருப்பதாகவும், "நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும்" ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி,ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மொஜ்தபா கமேனி ஈரான் உச்ச தலைவராக மார்ச் 8 அன்று நியமிக்கப்பட்டதிலிருந்து பொதுவில் தோன்றவில்லை. அவரது முதல் பொது உரை மார்ச் 12 அன்று அரசு ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டது.ஒரு தொகுப்பாளரால் வாசிக்கப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையில் யார் பயணம் செய்யலாம்
"போரின் நியாயமான முடிவுக்கு வழிவகுக்கும் எந்தவொரு பிராந்திய முயற்சியையும்" ஈரான் வரவேற்கிறது என்றும், ஹோர்முஸ் "அமெரிக்க கப்பல்கள் மற்றும் [அமெரிக்க] நட்பு நாடுகளைத் தவிர அனைவருக்கும் திறந்திருக்கும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

"போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இதுவரை எந்த குறிப்பிட்ட முயற்சியும் இல்லை" என்று அராக்சி கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |