சிம்ம சொப்பனமாகும் ஹோர்முஸ் நீரிணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையை கடக்க எதிரி நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி கிடையாது என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாவது,
ஹோர்முஸ் நீரிணையை நாங்கள் மூடவில்லை. உண்மையில் அந்த நீரிணை திறந்தே இருக்கிறது. இது எங்கள் எதிரிகளுக்கு சொந்தமான கப்பல்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உட்பட நட்பு நாடுகளுக்கு மூடப்பட்ட நீரிணை
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே இந்த முக்கிய கடல் பாதை மூடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்லலாம்.

பாதுகாப்பு கவலைகள் காரணமாக பல கப்பல்கள் இந்த பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
இராணுவ ரீதியாக தடுக்கப்படவில்லை
இது தொடர்பாக ஈரான் புரட்சிகர காவல்படை கடற்படை தளபதி அலிரேசா டாங்சிரி கூறும்போது, ஹோர்முஸ் நீரிணை இராணுவ ரீதியாக தடுக்கப்படவில்லை. அது வெறும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஈரானின் கடற்படையை அழிப்பது அல்லது எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்குவது பற்றிய அமெரிக்காவின் கூற்றுகள் தவறானவை ஆகும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |