யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் (படங்கள்)
Sri Lanka Army
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vanan
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனால், இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர்.
நிலைமை சுமூகமானதை தொடர்ந்து நள்ளிரவை அண்மித்தும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதனை அடுத்து இன்றைய தினம் அதிகாலை முதல் பலர் நீண்ட வரிசையில் காத்து இருந்து எரிபொருளை பெற்று சென்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பலர் காத்து இருக்கின்றனர்.







