ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானின் பங்கு: அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
CID - Sri Lanka Police
Pillayan
Sri Lankan Peoples
Easter Attack Sri Lanka
By Dilakshan
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அனைத்தையும் அறிந்திருந்த பிள்ளையான் தொடர்பான தகவல்களை விரைவில் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று அவர் பதில் அளிக்கையில் அவர் அதனை குறிப்பிட்டார்.
இதன்படி, நீதினமன்றுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றின் ஆலோசனைக்கு அமைய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜயபால குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் விசாரணை
அத்தோடு, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், ஏனைய விசாரணைகள் குறித்து தற்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

