கடும் பொருளாதார நெருக்கடி -உள்ளுராட்சி சபைகளை உடன் கலைக்க கோரிக்கை
உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைத்துவிட்டு விசேட ஆணையாளர்களின் கீழ் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்றங்களில் பாரியளவிலான உறுப்பினர்கள் இருப்பது சுமையாக இருப்பதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் பிரதித் தலைவர் தம்மிக்க முத்துகல தெரிவித்துள்ளார்.
அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீடிப்பு பொருளாதாரத்திற்கு கட்டுப்படியாகக் கூடிய தீர்மானம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
சில மாநகர சபைகளின் மேயர்களின் மாதாந்தச் செலவு ஒரு மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில், இவ்வாறான தேவையற்ற செலவினங்களைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
