திருகோணமலை மாவட்ட ஆரம்பகட்ட தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு
புதிய இணைப்பு
திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான அனைத்து ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் நிறைவு கட்டத்தினை அடைந்திருபதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சாமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இன்று திருகோணமலை வாக்கு எண்ணும் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களாக 318 வாக்களிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 106 வாக்களிப்பு நிலையங்களும் மூதூர் தேர்தல் தொகுதியில் 114 வாக்களிப்பு நிலையங்களும் சேருவில தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பி வைக்கும் செயற்பாடானது இன்று காலை 7.00 மணி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு மதியம் 11.30மணியளவில் நிறைவு பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் (Trincomalee), மொத்தமாக 318 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலானது நாளை (21)இடம் பெறவுள்ள நிலையில் வாக்கு சாவடிகளுக்கான வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்று (20)அனுப்பி வைக்கப்பட்டன.
திருகோணமலை
இதனடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில் குறித்த வாக்கு பெட்டிகளானது திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் வைத்து விநியோக நடவடிக்கை இடம்பெற்றது.
திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட திருகோணமல தேர்தல் மாவட்டத்தில் இம்முறை மொத்தமாக 315925 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அந்தவகையில் திருகோணமலை தேர்தல் தொகுதி - 105005 மூதூர் தேர்தல் தொகுதி - 123363 சேருவில தேர்தல் தொகுதி – 87557 3 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |