சிலரின் நாகரீகமற்ற நடத்தையால் நிறுத்தப்பட்ட கூட்டம் - அமைச்சர் சந்திரசேகரன் சீற்றம்

Kilinochchi National People's Power - NPP Ramalingam Chandrasekar Ramanathan Archchuna NPP Government
By Kajinthan Jul 17, 2026 04:41 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், சிலரின் பொறுப்பற்ற மற்றும் நாகரிகமற்ற நடத்தையால் இடைநிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய அபிவிருத்தி விடயங்கள் விவாதிக்கப்படும் உயர்மட்ட நிர்வாக மேடைகள், தனிப்பட்ட அரசியல் நாடகங்களுக்கான அரங்குகளாக மாற்றப்படக் கூடாது.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்

திசைதிருப்பும் முயற்சிகள்

கூட்டங்களில் கலந்துகொள்வது என்பது வெறுமனே சத்தமிடுவதோ, குழப்பம் விளைவிப்பதோ அல்ல, ஜனநாயக மரபுகளையும், நிர்வாக நடைமுறைகளையும், அதிகாரிகளின் கௌரவத்தையும் மதித்து செயல்பட வேண்டிய பொறுப்புணர்வாகும்.

சிலரின் நாகரீகமற்ற நடத்தையால் நிறுத்தப்பட்ட கூட்டம் - அமைச்சர் சந்திரசேகரன் சீற்றம் | District Development Committee Meeting Suspended

அதற்கான அரசியல் நாகரிகத்தையும், நிர்வாக பண்பாட்டையும் சிலர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

தொடர்ச்சியாக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அபிவிருத்திப் பணிகளை திசைதிருப்பும் முயற்சிகள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

அரசியல் நாடகம்

அரசியல் இலாபத்திற்காக மக்களின் எதிர்காலத்தோடு விளையாட அனுமதிக்க முடியாது.இன்று நடைபெற்ற சம்பவம், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை அவசியம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

சிலரின் நாகரீகமற்ற நடத்தையால் நிறுத்தப்பட்ட கூட்டம் - அமைச்சர் சந்திரசேகரன் சீற்றம் | District Development Committee Meeting Suspended

சிலர் குழப்பத்தை உருவாக்கலாம், ஆனால் நாம் அபிவிருத்தியை உருவாக்குவோம். சிலர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றலாம், ஆனால் நாம் மக்களின் வாழ்க்கையை மாற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் நாங்களும் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

கிளிநொச்சியை ஒருபோதும் கைவிடமாட்டோம். மீண்டும் விரைவில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உறுதியான தீர்மானங்களும், முன்னேற்றப் பாதையும் அங்கே உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது

வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி

வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025