டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

Government Of Sri Lanka Attorney General of Sri Lanka Law and Order Cyclone Ditwah
By Sathangani Jul 16, 2026 06:27 AM GMT
Report

"டித்வா" சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"டித்வா" சூறாவளி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முறையான பூர்வாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு | Ditwah Fr Petition Against Govt To Be Considered

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முறையான வழிகாட்டுதல்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அந்த மனுவின் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு

2.5 மில்லியன் மோசடி : சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றின் உத்தரவு

YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016