போலிகளை நம்பாதீர்கள்! உடனே இதனைச் செய்யுங்கள் - இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்
Corona
Shavendra Silva
Delta
By Chanakyan
உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாறாது விரைவாக தடுப்பூசியை செலுத்தி தொற்றினால் ஏற்படும் அபாய நிலையைத் தவிர்க்குமாறு வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவா தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவு படுத்தியிருக்கிறது. மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் 75 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு டோசையாவது செலுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி