எங்களுடன் மோதாதீர்கள்! கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்த ஜே.வி.பி
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே வழிநடத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) குற்றம் சுமத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களிடம் மேலதிகமாக வாக்குமூலம் பெறுவதற்கு வைத்தியசாலையினூடாக இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என நிட்டம்புவ காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கூடுதல் செய்திகளை உள்ளடக்கி வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
