தும்மல் வரும் போது இதை மட்டும் செய்யாதீர்கள்..! உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
தும்மல்(Sneeze) என்பது நமது உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக்களுக்கு எதிரான இயற்கையின் தற்பாதுகாப்பு செயன்முறையாகும்.
நாம் தும்மும் போது நமது உடலுக்குள் நுழைய முயலும் கிருமிகள் அல்லது துகள்கள், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வெளியேற்றப்படும்.
அவ்வாறு, நாம் தும்மும் போது அருகில் உள்ள நபருக்கும் நமக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில் தும்முவது சிறந்தது.
தும்மலை நிறுத்துவது
சாதாரணமாக தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும்.
அந்த சமயம் நீங்கள் தும்மலை நிறுத்தினால், பல வித பிரச்சினைகளுக்கு முகம் குடுக்க வேண்டி ஏற்படும்.
அந்தவகையில், தும்மலை நிறுத்தும் போது 160 கிலோமீட்டர் வேகத்தில் வெளியே செல்லும் காற்று தடைபட்டு அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும்.
அவ்வாறு காதுகள் பக்கம் திரும்பிட்டது என்றால், செவிப்பறைகளில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போக வாய்ப்பு இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உயிருக்கே ஆபத்து
அது மாத்திரமின்றி காற்று தடைபடுவதால் ஏற்படும் அழுத்தம் மூளை நரம்புகளை கூட பாதிக்கலாம் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தும்மலை நிறுத்தினால் காற்றின் அழுத்தம் உள்ளே அடைபட்டு காற்று அழுத்தத்தினால், உங்கள் கண்களின் இரத்த தந்துகிகள் பாதிப்படைய கூடும்.
எனவே, தும்மலை நிறுத்துவது உயிருக்கே ஆபத்தானதாக இருப்பதால், எப்போதும் தும்மலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம். அதனால் கைக் குட்டைகளை பயன்படுத்தியாவது தும்முவது உடலுக்கு மிக நல்லது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)