ஐ.நா வதிவிட பிரதிநிதி கோட்டாபய அரசிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமை பாதுகாக்கப்படவேண்டும்.இந்த உரிமை கொரோனா கட்டுப்பாட்டு சட்டங்களால் மீறப்படக்கூடாது.
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பொது சுகாதாரத்தின் நியாயமான பாதுகாப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்க கூடாது என இலங்கை அரசிடம் ஸ்ரீலங்காவிற்கான ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்டமூலத்திற்கு எதிராக கல்வித்துறையில் உள்ளவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களை காவல்துறையினர் கடும்போக்குடன் கையாண்டிருந்த நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமை உள்ளடங்கலாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார். ஒன்றுகூடுவதற்கான உரிமை என்பது, கருத்துச் சுதந்திரம் மற்றும் பொதுக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவது உள்ளடங்கலாக ஏனைய மனித உரிமைகளை உறுதி செய்வதற்கு உதவும் ஒன்றெனவும் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://t.co/3la6iWyoUs The UN Resident Coordinator in Sri Lanka Ms Hanaa Singer has written to PM Mahinda Rajapaksa reiterating concerns with the existing Ministry of Health guidelines, which stipulate cremation as the only method for the disposal of bodies suspected of COVID-19 pic.twitter.com/NdjvSWdRtn
— Buvini Liyanagamage (@BuviniL) November 13, 2020