சூம் தளத்தில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!
சூம் காணொளித் தொடர்பாடல் தளத்தில் ஆவணக்கங்களை பதிவேற்றக்கூடிய புதிய அம்சம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
சூம் நிறுவனத்தின் Zoomtopia 2023 ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றிருந்தது, நிகழ்வின் போதே இது குறித்த அறிவிப்பினை நிறுவனம் வெளிவிட்டிருந்தது.
கடந்த 2011-ல் நிறுவப்பட்ட சூம் காணொளித் தொடர்பாடல் நிறுவனமானது, பரவலாக சூம் என அனைவராலும் அறியப்படுகிறது.
பணி முடக்கம்
கூட்டங்கள், குரல் வழி அழைப்புக்கள், குழு அழைப்புக்கள் என்பவற்றை மேற்கொள்ள இந்த தளம் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
கொரோனா பரவலின்போது உலக அளவில் சூம் தளம் வெகுவாக பயன்படுத்தப்பட்டது.
அலுவலகம், பாடசாலைகள், கல்லூரிகள் எனப் பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது, இந்த தளத்தின் மூலம் கொரோனா காலத்தில் பணி முடக்கம் நடைபெறாமல் அனைவராலும் தத்தமது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடிந்தது.
இத்தகைய சூழலில் Zoomtopia 2023 நிகழ்வில் தங்கள் தளத்தின் சேவைகளை மேலும் விரிவு செய்யும் வகையில் Zoom Docs அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்திருந்தது.
சூமின் ஏஐ (AI) நிறுவனத்தினை ஒருங்கிணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
போட்டியாக இருக்கும்
இது கூகுள் வொர்க் ஸ்பேஸ் (Google Work Space) மற்றும் மைக்ரோசாஃப்ட் 365-க்கு (Microsoft 365) மாற்றாக அல்லது போட்டியாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது.
எதிர்வரும் 2024-ல் அதிக இதனை உத்தியோகபூர்வமாக அனைவராலும் பயன்படுத்தக்கூடியவாறு பயன்பாட்டுக்கு Zoom Docs கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூமின் டீம் சாட் (Zoom Team Shot), பிரவுசர் (Browser) மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலமாக Zoom Docs சேவையை பயனர்கள் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
சூமின் ஏஐ நிறுவனத்தின் மூலம் கொண்டு டாக்குமென்ட்டில் உள்ள கன்டென்ட் சார்ந்த தகவலை பயனர்கள் பெறக்கூடியவாறு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் Zoom Docs-ல் டாக்குமென்ட்களை இன்டர் லிங்க் செய்வது, எம்பாட் (Embed) செய்யவும் முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக சூம் மீட்டிங்கின் போது இதை நேரடியாக பயன்படுத்தலாம் என்பதும் ஒரு சிறப்பான அம்சமாக உள்ளது.