இஸ்ரேலிடம் உண்மையிலே அணுவாயுதங்கள் இருக்கின்றனவா!
அமெரிக்காவின் வேலா ஹோட்டல் செய்மதி ups 6911 பூமியிலிருந்து சுமார் 800 km தொலைவில் பறந்தபடி 1979 செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அதிகாலையில் பூமியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது.
இதன்போது, இந்து மா சமுத்திரத்தின் தென் பகுதியில் 2 பாரிய பிரகாசமான வெளிச்சங்கள் தோன்றியதை அந்த அமெரிக்கச் செய்மதி அவதானித்தது.
அந்த வெளிச்சங்கள் அணுகுண்டு வெளிச்சங்கள் - அணுகுண்டு பரிசோதனையின் போது ஏற்படும் வெளிச்சங்களை ஒத்திருந்தது. இதனால், யார் அந்த அணுகுண்டுப் பரிசோதனையை செய்திருப்பார்கள் என்று கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது அமெரிக்கா.
ஆனால் அந்த அணுகுண்டு பரிசோதனையை மேற்கொண்ட நாடு பற்றி இன்று வரை அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
Vela incident அல்லது South athlantic class என்ற அணு ஆயுதப் பரிசோதனை குறித்து அமெரிக்கா வாய்திறக்காவிடினும், அது தொடர்பில் தேடல்களை மேற்கொண்ட அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஆய்வுக்குழுக்கள் அன்றையதினம் இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில் அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கொண்ட நாடு இஸ்ரேல் என்று பகிரங்கப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால் இந்த ஆய்வு முடிவை இஸ்ரேல் ஏற்கவும் இல்லை - மறுக்கவும் இல்லை.
- இஸ்ரேல் தனது எல்லையில் இருந்து வெகுதொலைவில் இந்த ஆய்வை மேற்கொண்டது ஏன்?
- இந்த ஆய்வு தொடர்பில் இஸ்ரேல் மௌனம் காப்பது எதற்காக?
-
அணுகுண்டு போன்ற சக்திவாய்ந்தத ஆயுதங்களை யூதர்கள் தம் வசம் வைத்திருக்க எண்ணியது ஏன்?
இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலாய் வருகிறது இன்றைய நிதர்சனம்,