டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (21) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 05 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 14 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 403 ரூபா 32 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 419 ரூபா 30 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 352 ரூபாய் 37 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 366 ரூபாய் 92 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 91 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 63 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபாய் 71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 42 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 250 ரூபாய் 94 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.92 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.14 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.99 ரூபாயிலிருந்து 321.85 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332 ரூபாயிலிருந்து 332.10 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 323 ரூபாய் மற்றும் 333 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்