நுவரெலியாவில் சுற்றுலா விடுதியில் இளம் பெண் படுகொலை!
நுவரெலியாவில் சுற்றுலா விடுதியொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மார்காஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அம்பாறை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பியூமி தில்ஷானி பெண்ணே உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண், நுவரெலியா - தேரிப்பஹ பகுதியில் வசிக்கும் தனது 27 வயதுடைய காதலனுடன் கடந்த ஏழாம் திகதி குறித்த சுற்றுலா விடுதிக்கு வருகை தந்து அறையை முன்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (10-11-2026) காலை குறித்த பெண் விடுதிக்குள் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்ட விடுதியின் உரிமையாளர், இது தொடர்பில் நுவரெலியா காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் காதலன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் நுவரெலியா நீதவானின் தலையீட்டுடன் முதற்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |