பிரிட்டனிலிருந்த அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனிக்கு இடமாற்றம்!
பிரிட்டனின் RAF Mildenhall விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஜெர்மனியில் உள்ள விமானத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
ஈரானிடமிருந்து விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் RAF Mildenhall மற்றும் RAF Lakenheath ஆகிய இராணுவத் தளங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை நிலை FPCON Charlie ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இராணுவப் பணியாளர்கள்
விமானங்கள், இராணுவப் பணியாளர்கள் மற்றும் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களால் விமானங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கான மேலதிக விபரங்களை அமெரிக்க விமானப்படை வெளியிட மறுத்துள்ளது.

இதற்கு முன்னரும் செப்டம்பரில் RAF Fairford தளத்தில் ஈரான் தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த B-1 குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்காவுக்கு மீள அனுப்பப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இருவர் பின்னர் பிரிட்டனின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் ஈரான் உளவுத்துறைக்கு உதவ முயன்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் மத்திய கிழக்கில் ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |