இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பயணிக்கு நேர்ந்த துயரம்
Galle
Tourism
Death
Russia
By Jaso
இலங்கைக்கு சுற்றுலா வந்த நிலையில் பெந்தோட்ட கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை (09) குளித்துக் கொண்டிருந்த 30 வயதுடைய ரஷ்ய நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, அந்த வெளிநாட்டவர் அலையில் சிக்கி நீரில் மூழ்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, பெந்தோட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியசாலை பிரேத அறையில் சடலம்
உயிரிழந்தவரின் சடலம் பெந்தோட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெந்தோட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி