டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (30) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபா 46 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 333 ரூபா 45 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 409 ரூபா 10 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 425 ரூபா 03 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 353 ரூபாய் 09 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 367 ரூபாய் 62 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 236 ரூபாய் 02 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 13 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 47 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 251 ரூபாய் 93 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.39 ரூபாயிலிருந்து 322.66 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 334.66 ரூபாயிலிருந்து 333.90 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.22 ரூபாயிலிருந்து 321.73 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 333.25 ரூபாயிலிருந்து 332.75 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 324 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 334 ரூபாயிலிருந்து 332ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |