பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 21 வயது மாணவி ஒருவர், அனுராதபுரத்தில் புனித யாத்திரை மேற்கொண்டு அக்மீமனாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று அதிகாலை (26) எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக எல்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்
துரதிஷ்டவசமாக உயிரிழந்த மாணவி, அக்மீமன, தோடகொட, அடரவத்தவைச் சேர்ந்த ககுலி காவ்மினி ஆவார்.
புனித யாத்திரைக்கு சென்று வந்தவேளை துயரம்
அந்த மாணவி தனது குடும்பத்துடன் காரில் அனுராதபுரத்திற்குச் சென்று, புனித யாத்திரையை முடித்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாகத் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, காய்ச்சல் காரணமாக எல்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இவ்வாறு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, இன்று அதிகாலை (26) எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |