ஷிரந்தி ராஜபக்சவிற்கு தொடரும் அறுவை சிகிச்சை...!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷிரந்தி ராஜபக்சவின் இதயத்துடிப்பில் மாற்றம் இருப்பதை வைத்தியர்கள் முதலில் கண்டறிந்த நிலையில் உடனடியாக ஷிரந்தி ராஜபக்சவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பைபாஸ் அறுவை சிகிச்சை அல்ல என்றும் மாறாக பரிசோதனைகளின் போது இதயத் துடிப்பில் மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் விசாரணை
இதனடிப்படையில் அடுத்த சில நாட்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவர் இன்னும் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரிலிய சவிய கணக்கு தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவால் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.
அறுவை சிகிச்சை
இதனைத்தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு (16.10.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலை குறித்த தகவல்கள் அறிக்கையில் உள்ளதாகவும் அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |