வங்காள விரிகுடாவில் தீவிர புயல் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் கடுமையான புயலாக மாறக்கூடும் என வளிமண்மலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திணைக்களம் அவசர சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்தும் நீடித்துள்ளது.
திணைக்களத்தின் இயற்கை இடர்கள் முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
தீவிர காற்றழுத்த தாழ்வு
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த சில தினங்களில் கடுமையான புயலாக (Severe Cyclonic Storm) தீவிரமடைய வாய்ப்புள்ளது.
கடுமையான இடியுடன் கூடிய பலத்த மழை
இதன் நேரடி விளைவாக, வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கிலோமீட்டர் வரை மிக அதிகரிக்கக்கூடும்.

அத்துடன் இப்பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் கடல் பகுதிகள் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |