டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 23 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 47 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபாய் 70 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 421 ரூபாய் 18 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 363 ரூபாய் 46 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237 ரூபாய் 47 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 247 ரூபாய் 97 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 44 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 68 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 251 ரூபாய் 13 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.18 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 332.38 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.37 ரூபாயிலிருந்து 319.50 ரூபாயாக குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 330.50 ரூபாயாக மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே , 322 ரூபாய் மற்றும் 331 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |