சடுதியாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா - வெளியான அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Financial crisis
Dollars
By Kalaimathy
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369.38 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 358.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாயின் மதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதே நேரம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 355.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டேர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 426.56 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 410.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 11 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்