டொலரின் பெறுமதியில் மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Dollars
By Kanna
இலங்கை மத்திய வங்கி இன்றைய (செப்டம்பர் 20) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி
இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 359 ரூபா 17 சதமாகவும்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 94 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 422 ரூபா 56 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 406 ரூபா 47 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 370 ரூபா 47 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 355 ரூபா 51 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்