டொலரின் வீழ்ச்சி தொடர்பில் நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!
டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய, சந்தையில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதா என்பதை ஆராய நடவடிக்கை எடுப்பதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சந்தையில், 75 வீதமான பொருட்கள், நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டவையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
விலை குறைவடைந்துள்ளதா
அதிபரின் ஆலோசனைக்கு அமைய, வர்த்தக மற்றும் கொள்கை நடைமுறையாக்கல் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து தற்போதைய நாட்களில், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய, சந்தையில் அத்தியாவசிய பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதா என்பது ஆராயப்படுகிறது.
அவ்வாறு விலை குறைவடையாவிட்டால், அது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
