டொலருக்கு நிகராக அதிகரித்த இலங்கை ரூபாயின் பெறுமதி!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 10.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமாத்திரமல்லாமல், ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான பெறுமதியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும்
கடந்த வாரத்தில் ஜப்பானிய யென்னுக்கு எதிராக இலங்கை ரூபாய் 15.9 சதவீதமும், ஸ்ரேலிங் பவுண்ஸிற்கு எதிராக 3.8 சதவீதமும் அதிகரித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிரவும் எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி முதல் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் அதிகரிக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
விநியோகம் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு டொலரின் பெறுமதியினைத் தீர்மானிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருக்கிறது.
டொலர் பரிவர்த்தனையே காரணம்
மேலும் சமீபகாலமாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டிருந்த ஏற்ற இறக்கங்களிற்கு டொலர் பரிவர்த்தனையே முற்றிலும் காரணம் எனவும் கூறப்படுகிறது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன், ரூபாயின் மதிப்பு மீண்டும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.