இன்று சிறிலங்காவிற்கு விடிவு..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்
Central Bank of Sri Lanka
IMF Sri Lanka
By pavan
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போதுமான வெளிநாட்டு இருப்புக்கள் இன்னமும் இலங்கையிடம் இருக்கும் என நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதன் மூலம், இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், இதனால் இலங்கைக்கு புதிய வெளிநாட்டு நிதிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான புதிய அணுகுமுறைகள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்