இவ்வருடம் டொலருக்கு நிகராக அதிக தேய்மானம் கொண்ட நாணயங்களின் பட்டியல் - முதல் ஐந்து இடத்திற்குள் இலங்கை ரூபா!
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Pakirathan
இவ்வாண்டு அமெரிக்க டொலருக்கு நிகராக அதிக தேய்மானத்தை கொண்ட நாணயங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் ஐந்து நாட்டு நாணயங்களில் இலங்கை ரூபாவும் இடம்பெற்றுள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை ரூபாவின் நிலை
குறித்த பட்டியலில் அதிக தேய்மானத்தை கொண்ட நாணயங்களில் இலங்கை ரூபா நான்காவது இடத்தில் உள்ளது.
அந்தவகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
முதல் மூன்று இடங்களில் உள்ள நாணயங்கள்
இந்தப்பட்டியலில் முதலாவது இடத்தில் சிம்பாப்வேயின் நாணயமான டொலர் உள்ளதுடன், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் அதன் பெறுமதி 77.78 சதவீமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வெனிசூலாவின் பொலிவர் மற்றும் கியூபாவின் பெசோ ஆகிய நாணயங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்