அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம்! –களத்தில் இறங்கினர் பெற்றோர் (photos)
protest
Trincomalee
parents
Sreesanmuga Hindu Women's College
By Sumithiran
திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயா உடையை ஆசிரியை ஒருவர் அணிந்து வந்ததை அடுத்து எழுந்த சர்ச்சையை அடித்து குறித்த ஆசிரியை அதிபரை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நேற்றையதினம் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் அதிபரை அடித்த ஆசிரியை எமக்கு வேண்டாம் என தெரிவித்து பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய பெருமளவான பெற்றோர்,மாற்று கலாசாரத்தை திணிக்காதே,அடாவடி ஆசிரியையை கைது செய்,கல்வி அதிகாரியே மதக்கலவரத்தை தூண்டாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




