நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்
உள்ளூர் பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த செயற்கைக்கோள் நாளை (19) பிற்பகல் 2:15 மணிக்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘BIRDS-X Dragonfly’ என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதியன்று நாசாவால் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ்-33 ரொக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
முதலாவது நானோ செயற்கைக்கோள்
முன்னர், 2019 ஆம் ஆண்டில், இலங்கை தனது முதலாவது நானோ செயற்கைக்கோளான ‘ராவணன்-1’ ஐ வெற்றிகரமாக ஏவியது.
மேலும் 2022 ஆம் ஆண்டில், ஐந்து சர்வதேச கூட்டாளர்களை உள்ளடக்கிய பன்னாட்டு தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக KITSUNE செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
அதன்படி, ‘BIRDS-X Dragonfly’ நானோ செயற்கைக்கோள் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து அதன் நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
