பெண்களுடன் நடனம் நெதன்யாகுவுடன் மது : ட்ரம்ப் வெளியிட்ட காணொளி
காசாவை (Gaza) விடுமுறை ரிசார்ட் சுற்றுலாத் தலமாக சித்தரித்து ட்ரமப் (Donald Trump) வெளியிட்ட AI காணொளி தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 13 மாதகால போரினால் 56,000 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் (Israel) தாக்குதலுக்கு பலியாகியுள்ளதுடன் காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட்
ஆனால் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உபகரணங்கள் இல்லாமல் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே காசாவை வருங்காலத்துக்கான ரியல் எஸ்டேட் தளம் என்றும் அதை விலைக்கு வாங்கி சீரமைக்க போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிவருகிறார்.
அங்குள்ள மக்களை நிரந்தரமாக வெளியேற்றி அரபு நாடுகளில் குடியேற்றம் செய்யும் திட்டத்தையும் ட்ரம்ப் முன்மொழிந்து வருகிறார்.
டிரம்பின் இந்த சுத்தப் படுத்துதல் திட்டம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டியும் வருகிறார்.
ஏஐ காணொளி
இந்நிலையில் காசாவை விடுமுறை ரிசார்ட் சுற்றுலாத் தலமாக சித்தரித்து டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில் அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் ஏஐ காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த காணொளி பகிராப்பட்டுள்ளது.
குறித்த காணொளியின் தொடக்கத்தில், காசா மிகவும் பரிதாபகரமான நிலையில் காட்டப்பட்டுள்ளது, அங்கு மக்கள் பசியால் அவதிப்படுவது காட்டப்பட்டுள்ளது.
அதன்பின், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி காணொளியில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகு காசா ஒரு சுற்றுலா தலமாகக் காட்டப்படுவதைக் இந்த காணொளியில் காணமுடிகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்