போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் - மக்களுக்கு எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
போலியான குறுஞ்செய்திகள்
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, கையடக்கத் தொலைபேசிகளில் பெறப்படும் குறுஞ்செய்திகளுக்கு (SMS) எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அல்லது அதற்குப் பதிவு செய்யுமாறு போலியான தகவல் பகிரப்படுவதாகவும் எனவே இதனை மக்களைக் கூர்ந்து அவதானிக்குமாறு இலங்கை கணனி அவசரகாலப் பதிலளிப்பு மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் கைபேசிகளுக்கு இதுபோன்ற குறுஞ் செய்திகளை அனுப்புவதன் மூலம் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க வேலை செய்கிறார்கள் என்று மன்றம் கூறியது.
எனவே, நீங்கள் பெறும் இவ்வாறான போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசர பதில் மன்றம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.
இலங்கை கணனி அவசர பதில் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ

