தொல்லைப்படுத்தாதீர்கள் -பொன்சேகா மன்றாட்டம்
SJB
Sarath Fonseka
Election
By Sumithiran
அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என தொடர்ந்து கேட்டு அசௌகரியங்களை ஏற்படுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"நீங்கள் இங்கு யாரிடமாவது கேட்டால், அவர்கள் அடுத்த வேட்பாளராக இருக்க விரும்புவதாகச் சொல்வார்கள். எனவே இந்தக் கேள்விகளைக் கேட்டு என்னைக் கடினமான இடத்தில் நிறுத்த வேண்டாம்" என்று பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
துரோகம் செய்ய மாட்டேன்
எனினும், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்ய மாட்டேன் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
