வெளிநாடொன்றில் கரை ஒதுங்கிய அரியவகை மீன் : உலக பேரழிவுக்கான அறிகுறி...! : அச்சத்தில் மக்கள்
மெக்சிகோ(mexico) கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ (Oar) மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது மக்களை அச்சத்தில் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள பாஜா கலிபோர்னியா சுரின் எனும் ஆழமற்ற நீர்நிலைகளின் கரையில், ஆழ் கடலில் மட்டுமே காணப்படும் நீள ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஒரேஞ் நிற துடுப்புகளுடன் கூடிய ‘டூம்ஸ் டே’ மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
கடல் கடவுளின் தூதன்
மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த மீன்கள் ஜப்பானிய(japan) புராணக் கதைகளில் கடல் கடவுளின் தூதன் என்று வர்ணிக்கப்படுகின்றன. பெரும்பாலும், வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக இவை இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கும் எனக் கருதப்படுகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்கு முன்னர் சுமார் 20 ‘டூம்ஸ் டே’ மீன்கள் இறந்த நிலையில் அந்நாட்டு கடல் பகுதிகளில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

இலங்கை,பாகிஸ்தான் சாதனைகள் தகர்ப்பு : சம்பியன்ஸ் கிண்ண தொடரில் புதிய வரலாறு படைத்தது அவுஸ்திரேலிய அணி
மிகப்பெரிய அளவிலான பேரழிவு
இதனைத் தொடர்ந்து, தற்போது மெக்சிகோவின் கடல் பகுதிகளில் இவ்வகை மீன்கள் சமீப காலமாக கரை ஒதுங்கும் காணொளிகள் இணையத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய அளவிலான பேரழிவு ஏற்பட இருப்பதாக இணையவாசிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
