கொரோனா தடுப்பூசியை பெற போராடும் மக்கள்! ஜே.வி.பி குற்றச்சாட்டு
Corona
JVP
People
SriLanka
Vijitha Herath
By Chanakyan
முதலாவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் கிடைப்பதில் சந்தேகம் இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சாட்டியுள்ளதார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் மோசமான சூழ்நிலை இருந்தபோதிலும் பொதுமக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்று போராடிவருவதாகவும் அவர் கூறினார்.
மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்த கருத்தையும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறு இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சிறப்பாக முன்னெடுக்க அரசாங்கத்தால் முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி