தயாராக இருக்கிறேன் - டக்ளஸ் பகிரங்க சவால்
இலங்கை கடற்பரப்பில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக பழைய பேருந்துகளை மட்டுமல்ல பழைய ரயில் பெட்டிகளையும் இறக்கத் தயாராக இருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடலினுள் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக இலங்கை மட்டும் பழைய இரும்புகளை கடலினுள் இடவில்லை. ஐரோப்பிய நாடுகள் உட்பட சுமார் 40 க்கு மேற்பட்ட நாடுகள் கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்காக பழைய பேருந்துகள் மற்றும் பழைய கார்களை கடலில் இடுவது வழமையாக உள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,