சி.ஐ.டி விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ்
தரமற்ற மருந்து இறக்குமதி குறித்து கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்பில் அக்காலப்பகுதியில் இருந்த அமைச்சர் என்ற ரீதியில் தமக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
குற்றபுலனாய்வு விசாரணைக்கு பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"கோவிட் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட மருந்து தட்டுப்பாட்டினால் கொள்கை முடிவொன்று வழங்கப்பட்டது.
அதன்பின்னர் மருந்துகளின் தேவை குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் படி, மருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், குறித்த தீர்மானம் தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து செயற்பட்டிருக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |