தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்
நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெற தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமான 107 என்ற தொலைபேசி இலக்கத்தை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
மேற்படி, இலக்கத்தின் ஊடாக சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவசரகால சூழ்நிலைகள், இடப்பெயர்வுகள் மற்றும் உதவிகள் தொடர்பில் அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு காவல்துறை தலைமையகத்தில் 24 மணிநேர விசேட செயற்பாட்டு மையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
சுகாதார நிலையங்கள், விபத்துக்கள் மற்றும் உதவி பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
விசேட செயற்பாட்டு மையம்
அதன்படி, பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரி மூலம் காவல்துறை தலைமையகத்தை மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி எண் - 011-2027148, 011-2472757, 011 - 2430912 மற்றும் 011-2013051
மின்னஞ்சல் முகவரி - disaster.ops@police.gov.lk
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |