தமிழரசுகட்சியின் உட்கட்சி விவகாரத்தை கேலி செய்யும் டக்ளஸ்
அண்மைக்காலமாக தமிழர் தாயக பகுதியில் மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிலவரமானது ஒருதலைபட்சமாகவும் மற்றும் தன்னிச்சயாகவும் பெரிதும் சர்ச்சைக்குட்பட்டதாக இருந்து வருகின்றது.
அதாவது மக்கள் நலனுக்காக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி தற்போது பிளவுபட்டு தனிப்பட்டவர் நலனுக்காக நகர்கின்ற சூழலே இதற்கு காரணமாகும்.
74 ஆண்டுகளாக பயணித்த தமிழரசு கட்சியில் முதல் முதலில் தலைவர் தெரிவில் குளறுபடியானது துரதிஷ்டம் அளிப்பதாக அண்மையில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரனும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நிலவி வரும் இந்த அரசியல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.
மேற்படி அவரின் கருத்து அரசியல் இணக்கப்பாட்டுடனான நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றமை தெளிவாக புலப்படுகின்றது.
இந்த நிலையில் இதன் மூலம் இவர் தமிழரசுகட்சியின் உட்கட்சி விவகாரத்தையும் மற்றும் நீதிமன்ற விவகாரத்தையும் கேலிக்கை செய்துள்ளார்.
இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்றவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்றவர்கள் தற்போது தமது உட்கட்சி விவகாரத்திற்கு தீர்வு கோரி இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளர் எனவும் விமர்சித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினை என்றால் அது தீர்ந்துவிடக்கூடாதென்று சர்வதேச நீதிமன்றத்திற்கு போனவர்கள் தமது பிரச்சினை என்றவுடன் அதை இலகுவாக தீர்க்கும் விருப்பத்தோடும் மற்றும் நம்பிக்கையோடும் இலங்கை நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதிலிருந்து இவர்களது அரசியல் நாடக வேடம் முற்றாக கலைந்து விட்டதென அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |