வன்முறைகளுடன் ஈபிடிபிக்கு தொடர்பே இல்லை : அடித்துக் கூறுகிறார் டக்ளஸ்
ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியினராகிய தமக்கு வன்முறைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லையென அந்த கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (04) ஊடகவியலளர்களுக்கு கருத்து தெரிவிக்கும போதே அவர் இதனைத் தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டலந்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தகவலை வெளியிடும்போது வடக்கில் தமிழ் இயக்கங்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்து அதில் ஈபிடிபி கட்சியையும் சேர்த்துள்ளார். உண்மையில் வன்முறைக்கும் ஈபிடிபிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கச்சதீவை மீள இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமா, சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் காணொளியில்..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்