மட்டக்களப்பில் துரத்தியடிக்கப்பட்ட தொல்லியல் திணைக்களத்தினர்

Sri Lankan Tamils Batticaloa Sri Lankan Peoples
By Dhilak Nov 21, 2025 04:59 PM GMT
Report
Courtesy: சக்திவேல் வடிவேல்

தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக அங்கிகரித்து பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை(21.11.20250 வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் துரத்தியடித்தியுள்ளர்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதேச வெல்லாவெளியில் அமைந்துள் பிரதேச செயலகத்திற்குச் சென்ற மக்கள் பிரதே சபைத் தவிசாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட குழுவினர் அற்கு நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கலைந்து சென்றனர். 

இதன்போது கருத்தத் தெரிவித்த போரதீவுப் பற்றுப் பிரதெ சபையின் தவிசாளர் வி.மதிமேனன், 

ஹைஜாக் செய்யப்பட்ட ரணில் இந்தியாவில்! U.K இல் நாடுகடத்தல் அபாயத்தில் இலங்கையர்கள்...

ஹைஜாக் செய்யப்பட்ட ரணில் இந்தியாவில்! U.K இல் நாடுகடத்தல் அபாயத்தில் இலங்கையர்கள்...


பாரிய எதிர்ப்பு

போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக்கு உட்பட்ட வேத்துச்சேனை, கண்ணபுரம், மற்றும் விவேகானந்தபுரம், ஆகிய கிராமங்களுக்கு தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலே மூன்று உத்தியோகத்தர்கள் தொல்லியல் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து அடையாளப்படுத்தி பல பதாகைகளை இடுவதற்காக எமது பிரதேசத்திற்கு வந்திருந்தனர்.

மட்டக்களப்பில் துரத்தியடிக்கப்பட்ட தொல்லியல் திணைக்களத்தினர் | Department Of Archaeology Personnel Chased Away

இந்த நிலையில் எமது பிரதேச சபை உறுப்பினர்கள் இப்பிரதேச பொது அமைப்புக்கள் பொதுமக்கள் அயல் பிரதேசமான மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறு தொல்லியல் இடம் என அடையாளப்படுத்தும் இடுப்பதற்காக வருகை தந்திருந்த அதிகாரிகளை எதிர்த்து இவை தொல்லியல் இடம் இல்லை என்பதை நாங்கள் தெரிவித்து இருந்தோம்.

தொல்லியல் திணைக்களத்தினால் 24 இடம் இருப்பதாக தெரிவித்திருந்தார்கள் தற்போது கூறுகின்றார்கள் 34 இடம் இருப்பதாக கூறுகின்றார்கள். 

அவற்றுக்குரிய பதாகைகளை நடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தார்கள் அந்த வகையில் அதற்கு எமது மக்களுடன் சேர்ந்து நாங்கள் பாரிய எதிர்ப்பினை நாங்கள் தெரிவித்தோம்.

வடகிழக்கிலே தமிழர்களுக்கு பாரி அச்சுறுத்தலாக வன பாதுகாப்புத் திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் காணப்படுகின்றன. அதுபோன்றுதான் அண்மையில் திருவோணமலையிலும், புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கிலே பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தேசிய மக்கள் சக்தி என்ற பெயரிலே வந்த அரசாங்கம் முன்னர் ஜேவிபியினுடைய கொள்கையை பின்பற்றி வந்துள்ள அரசாங்கம் பலாத்காரமாக தமிழர்கள் வாழும் பகுதியிலே தொல்லியல் இடங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டை தோற்றுவித்து எமக்குள்ளே ஓர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

தமிழ் மக்களுடைய பூர்வீக காணி

அந்த வகையில் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு நாங்கள் கூறிக் கொள்வது யாதெனில் எங்கள் வடகிழக்கிலே இருக்கின்ற தமிழ் மக்களை நீங்கள் குழப்ப முடியாது.

எப்போதும் நாங்கள் எமது சமய புராண பூர்வீக நிலத்தை நாங்கள்தான் ஆள வேண்டும் நீங்கள் உங்களுடைய பௌத்த மயமாக்கல் என்பதை தொல்பொருள் திணைக்களத்தை வைத்து எமது நிலங்களை அபகரிக்க கனவிதும் நினைக்க கூடாது என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பில் துரத்தியடிக்கப்பட்ட தொல்லியல் திணைக்களத்தினர் | Department Of Archaeology Personnel Chased Away

கடந்த காலத்தில் சில தமிழ் மக்கள் விட்ட தவறினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் ஊடாக உருவாக்கி இருக்கின்றார்.

பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்கள் உருவாகி இருக்கின்றார்கள் எதிர்வரும் காலங்களில் தேசிய மக்கள் சக்தி ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் மீண்டும் வாக்களித்து அவர்களை பாராளுமன்றத்துக்கோ மாகாண சபைக்கோ உள்ளுராட்சி சபைகளுக்கோ இனியாவது அனுப்பாமல் விட்டு எமது தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாப்பதற்கு எமது தமிழரசுக் கட்சிதான் என்றும் கடைசி வரைக்கும் நிற்கும் என்பதை நான் கூறிக் கொள்கின்றேன்.

இன்றைய தினம் இந்த செயற்பாட்டுக்காக நாம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பிரதேச செயலாளருடன் உரையாடி உள்ளோம். எங்களுடைய தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளில் பொது அமைப்புகளின் எதுவி சம்பந்தங்களும் இல்லாமல் எந்தவித கலந்துரையாடலும் இல்லாமல், தாங்கள் நினைத்தபடி பலாத்காரமாக அணுகி எதையும்சாதித்துவிட முடியாது. 

மக்களின் பலத்தினால் நாம் அவர்களின் அணுக்கலை நாம் இன்று முறியடித்து இருக்கின்றோம்.

எனவே தொல்லியல் திணைக்களத்தினர் முதன் முதலில் பொதுமக்களுடன் கலந்துரையாட வேண்டும் பிரதேச சபையினுடைய வீதியிலே பதாகைலையோ எதுவிலோ வேலை திட்டங்களோ மேற்கொள்ளும் போது பிரதேச சபையின் அனுமதியைப் பெற வேண்டும். 

எமது பிரதேசத்தில் அடையாளப்படுத்தி அவர்கள் அடையாளப்படுத்தி இருக்கும் 34 பிரதேச இடங்களுக்கும் சென்று அங்கிருக்கின்ற பொது அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் அதன் பின்னர் தான் தொல்லியல் இடம் என்ன அடையாளப்படுத்தி பதாகைகளை இடவேண்டும் போன்ற தகவல்களை நாம் முன் வைத்திருக்கின்றோம் என இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசானர் வி.மதிமேனன் தெரிவித்தார்.

யாழில் துரதிஷ்ட வசமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழில் துரதிஷ்ட வசமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

சிறீதரன் எம்.பியின் முகநூல் பதிவால் வெடித்துள்ள சர்ச்சை

சிறீதரன் எம்.பியின் முகநூல் பதிவால் வெடித்துள்ள சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்