யாழில் துரதிஷ்ட வசமான உயிரிழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணத்தில் வயிற்றுவலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்று(21.11) காலை உயிரிழந்துள்ளார்.
கைதடி மத்தி, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் விக்கினேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 18ஆம் திகதி வயிறு வீக்கத்துடன் வயிற்று வலியும், காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில் 19ஆம் திகதி அதிகாலை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்