யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம்

jaffna development douglas
By Vanan Sep 18, 2021 07:30 AM GMT
Report

யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்தின் ஊடாக யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுள்ளன.

அந்தவகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் சுமார் 57 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோன்று, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நான்கு இடங்களில் இடி மின்னல் பாதுகாப்பு (இடி தாங்கி) பொறிமுறையினை அமைப்பதற்காக சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைவிட, கொட்டடி நாவாந்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள வலை ஒழுங்குபடுத்தும் மண்டபங்களை புனரமைப்பதற்காக சுமார் 119 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தினால் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்துதல் உட்பட சுமார் 17 வேலைத் திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டம் உட்பட கடற்றொழில் அமைச்சின் ஏனைய திட்டங்களும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026