அமைச்சர் டக்ளஸின் கூற்றுக்கு மனோ எம்.பி பாராட்டு

mano douglas ganeasan
By Vanan Jun 17, 2021 06:27 PM GMT
Report

13ஆம் திருத்தத்தின்படி மாகாண சபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுக்குள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும் இதுவே தமது கோரிக்கை என அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது, அமைச்சரவை தீர்மானத்தின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை, மத்திய அரசு சுவீகரிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மாகாண வைத்தியசாலைகளும் பறிக்கப்படும்.

ஆகவே இவை பற்றி வடக்கில், கிழக்கில், மலையகத்தில் இருந்து அரசுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமகாலத்தில் எதிரணியில் இருந்து அரசு பக்கம் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பிக்களும் தமது எதிர்ப்புகளை காட்ட வேண்டும்.

உண்மையில், 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல் செயயும்படியே, இந்திய அரசாங்கம், ஐநா மனித உரிமை ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம் என்பவை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை திரும்ப, திரும்ப கூறுகின்றன. 13ஆம் திருத்தத்தை முழுக்க அமுல் செய்வதை நிறுத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசு மேற்கொள்கிறது.

இது நிச்சயமாக, இந்திய அரசுடனான உறவு, செப்டம்பரில் அடுத்து வரும் ஐநா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை, ஐரோப்பிய நாடாளுமன்ற ஜி.எஸ்.பி + விவகாரம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் தனது ஜனாதிபதிக்கு எடுத்துக் கூற வேண்டும்.

பார்க்கப்போனால், இந்த ஜனாதிபதிக்கு உள்நாட்டு அரசியல் சட்டமும் தெரியவில்லை. இலங்கை பற்றிய வெளிநாட்டு நகர்வுகளும் தெரியவில்லை போல் எமக்கு தெரிகிறது.

இந்நாட்டில், அதிகார பரவலுக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த விலை என்பவை சில அமைச்சரவை தீர்மானங்களால் சுலபமாக பறி போக கூடாது.

இந்த உண்மை, அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முழு அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், எம்பிக்கள் ஆகியோருக்கு தெரிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி