சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்துமாறு டக்ளஸ் தேவானந்தா உத்தரவு!
எதிர்வரும் 10 நாட்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய விடயங்களை கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(15) யாழ்குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கலந்துகொண்டோர்
யாழ் மாவட்ட அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி பிரதேச செயலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.